நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசத்தி! - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ,- ந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசத்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சத்தியைப் படுநல் லகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், - வை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
you can find more barathiyar poem here...
ReplyDeletehttp://tamilkavingan.blogspot.com/2009/11/blog-post_05.html?showComment=1263909030655_AIe9_BE-ALrjPaHgyYvapyvF-SCBT4m8-Jr3E_BylT3yYig_uoZbWNmBZXs0ssofWFonMJb6lrtiND3dFe_Z9TFHwzrvC9qXtpwfOzy5GR7c5Bkvg66da5JXZB1y5DfqxDqatKsDoiEmrB00nggOdsMSI8NG-qkZuPl11UWsoOL2SOg7g82i5edf0J-fduXLaCMAVBqKEZrUwXtM9qbAy1SHFUUIOPonMbsvF7D7fFt_GW-Pp_7NuGQ#c6158298190930404888